பிரதமர் மோதியை “ஜனாதிபதி” என்று உளறிய பாக். பிரதமர் இம்ரான் !

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரில்  ஐக்கிய நாடுகள் சபையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளனர். முதலில் பேசிய நரேந்திர மோடி கடந்த 5 ஆண்டுகளில் தனது அரசு நிகழ்த்திய சாதனைகளையும், இனிமேல் செயல்படுத்தவுள்ள திட்டங்கள் குறித்தும் எடுத்துரைத்தார். அப்போது மோடி தூய்மை இந்தியா, காச நோய் இல்லாத நாடு, கழிப்பறை வசதிகள் குறித்து சிறப்பாக பேசினார்.

இதையடுத்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசத் தொடங்கினார். இம்ரான் கான் இந்தியா மற்றும் பிரதமர் நரேந்திர மோடி குறித்து பல்வேறு குற்றங்களை சாட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக பதவியேற்ற பின் இந்தியாவிடம் நட்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டேன். ஆனால், நரேந்திர மோடி இதற்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்று கூறினார்.

இவ்வாறு தனது உரையில் பெரும்பாலும் இந்தியாவுக்கு எதிராகவே பேசிய இம்ரான் கான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை ‘ஜனாதிபதி மோடி’ என்று தவறாக குறிப்பிட்டுள்ளார். இதனால் இம்ரான் கானை சமூக வலைதளங்களில் கிண்டல் செய்து கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகிறது.

author avatar
Vidhusan