இந்தி மொழி திணிக்கப்பட்டால் திமுக கட்டாயம் எதிர்க்கும் -கனிமொழி

மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் புதிய கல்வி வரைவு கொள்கையை வெளியிட்டது.இந்த புதிய கல்வி வரைவு கொள்கை 484 பக்கங்கள் கொண்டுள்ளது.
இந்நிலையில் புதிய கல்விக்கொள்கை வரைவு கொள்கையில் இந்தி பேசாத மாநில பள்ளிகளில் இந்தியை பயிற்றுவிக்க பரிந்துரை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் திமுக எம்.பி.கனிமொழி செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில், இந்தி உள்பட எந்த மொழியாக இருந்தாலும் திணிக்கப்பட்டால், நாடாளுமன்றத்தில் திமுக எதிர்க்கும் என்று  கனிமொழி கூறினார்.

Leave a Comment