டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இருந்தால் இது தான் இந்தியாவிற்கு இலக்கு !

இன்றைய முதல் அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் , நியூஸிலாந்து அணியும் மோதி வருகிறது .இப்போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெறுகிறது .இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

முதலில் நியூஸிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக  மார்ட்டின் குப்டில் ,ஹென்ரி நிக்கோல்ஸ் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடக்கத்திலே பும்ரா வீசிய வேக பந்தில் மார்ட்டின் குப்டில் 1 ரன்னில் வெளியேறினர்.

பின்னர் இறங்கிய கேப்டன் கேன் வில்லியம்சன் 67 , ராஸ் டெய்லர் 67 ரன்கள் விளாசியதன் மூலம் நியூஸிலாந்து அணி  46.1 ஓவரில்  211 ரன்கள் அடித்து 5 விக்கெட்டை பறிகொடுத்து விளையாடி கொண்டு இருந்த  போது மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில் மழை நின்ற பின் நியூஸிலாந்து அணி விளையாடாமல் இருந்தால் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி இந்திய அணிக்கு கீழே கொடுக்கப்பட்டு ஓவரின் படி ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்படும்.

46 ஓவர்  237 ரன்களாக ஆக இருக்கும்
40 ஓவர்  223 ரன்களாக ஆக இருக்கும்
35 ஓவர்  209 ரன்களாக ஆக இருக்கும்
30 ஓவர்  192 ரன்களாக ஆக இருக்கும்
25 ஓவர்  172 ரன்களாக ஆக இருக்கும்
20 ஓவர்  148 ரன்களாக ஆக இருக்கும்

author avatar
murugan