ஆசிரியர் தகுதித் தேர்வு – வினாக்களுக்கான விடைகள் இணையத்தில் வெளியீடு!

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு வாரியம் கடந்த மாதம் நடத்திய ஆசிரியர் தகுதி தேர்வின் வினாக்களுக்கான சரியான விடைகள் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் தேர்வு கடந்த ஜூன் மாதம் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில்  நடைபெற்றது.  தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 7 லட்சம் பேர் வரையில் இந்த தேர்வினை எழுதினர். கடந்த முறையை விட புது பாடத்திட்டத்தில் இருந்து அதிகமாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்ததால் தேர்வு கடினமாக இருந்தாக அனைவரும் கருத=தினர்.

இந்நிலையில், வினாத்தாளில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கான சரியான விடைகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. விடைகளில், ஏதேனும் தவறுகள் இருந்தால் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் உரிய ஆதாரத்துடன் முறையிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.