இன்னும் 45 இடங்களை பிடித்தால் இவர்தான் அமெரிக்க அதிபர்.! முடிவு விரைவில்.!

அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டி வருகிறது. 

வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். ஆனால், குடியரசு கட்சி வேட்பாளர் ரொனால்ட் ட்ரம்ப் தற்போது வேகமாக முன்னேறி வருகிறார்.

தற்போதைய நிலவரப்படி, ஜோ பைடன் 225 சபை ஓட்டுகள் பெற்றுள்ளார். இதுவரை பைடனுக்கு 49.8%  அதாவது 6,64,86,749 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது.

அதேபோல், மிகவும் பின்னடைவில் இருந்த ரொனால்ட் ட்ரம்ப் தற்போது 213 சபை ஓட்டுகளை பெற்று தொடர்ந்து முன்னேறி வருகிறார். இதுவரை டிரம்புக்கு 48.6% அதாவது, 6,49,03,424 ஓட்டுகள் எண்ணப்பட்டுள்ளது.

இதனால் வாக்கு எண்ணிக்கையில் கடும் போட்டி நிலவி வருகிறது. அடுத்த அமெரிக்கா அதிபர் யார் என்று பெரும் த்ரில்லாக இருந்து வருகிறது. ஏனெனில், முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.

இன்னும் 45 இடங்கள் பிடித்தால் ஜோ பைடன் வெற்றி பெறுவார். 57 இடங்கள் பிடித்தால் மீண்டும் அதிபர் ஆவார் ட்ரம்ப். எனவே, யார் அடுத்த அமெரிக்கா அதிபர் என்று மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 270 இடங்கள் பிடித்தால் வெற்றி என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்