பாடல்களை சூப்பர் ஹிட் ஆக்காமல் விடமாட்டேன்.! “தளபதி 66” குறித்து தமன்…

விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது . இந்த படத்தை தொடர்ந்து விஜய் அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் தனது 66-ஆவது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார் பிரபு பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில்,  தளபதி 66 படத்தின் பாடல்கள் குறித்தும் விஜய்யுடன்  பணியாற்றுவது குறித்து இசையமைப்பாளர் தமன் சமீபத்திய பிரத்தியேக பேட்டி என்று சில சுவாரஸ்யமான சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் “தளபதி 66 படம் ஒரு சிறந்த கதை. விஜய் சார் ஒரு அற்புதமான கதையை தேர்ந்தெடுத்துள்ளார். விஜய் சாரை பற்றி நான் எவ்வளவு உயர்வாக நினைக்கிறோனோ அது தளபதி 66 படத்தின் பாடல்களில் வெளிப்படும். படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகாமல் நான் விடமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.