அதை நான் செய்ய முடியாமல் போனது ..! த்ரில் வெற்றியை தொடர்ந்து கில் பேசியது இதுதான் ..!

ஐபிஎல் 2024 : ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டிக்கு பிறகு குஜராத் அணியின் கேப்டன் ஆன ஷுப்மன் கில் பேசி இருந்தார்.

நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியை, குஜராத் அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் கடைசி பந்தில் த்ரில்லாக வீழ்த்தி இருந்தனர். மேலும், களத்தில் இருந்த ரஷீத் கானும், ராகுல் தெவாடியாவும் இந்த போட்டி முடிந்த பிறகு அணியின் குஜராத் அணியின் கேப்டன் ஆன கில் வெற்றிக்கான காரணம் குறித்து பேசி இருந்தார்.

அவர் பேசுகையில்,”எங்களுக்கு கடைசி நேரத்தில் 3 ஓவர்களில் 45 ரன்கள் இலக்காக தேவைப்பட்டது. அந்த தருணத்தில் இதை கணக்கு போட்டு பார்த்தால் களத்தில் இருக்கும் இரண்டு பேட்ஸ்மேனும் சரியாக 9 பந்துகளில் 22 ரன்களை அடிக்க வேண்டி இருக்கும். இதை தாண்டி யாரேனும் ஒரு பேட்ஸ்மேன் பொறுப்பெடுத்து கொண்டு வெறித்தனமாக விளையாட வேண்டும்.

மேலும், கணிதங்களை தாண்டி களத்தில் இருக்கும் பேட்ஸ்மேனின் மனதிற்குள்ளும் தோன்ற வேண்டும். ஒரு தருணத்தில் பொறுப்பெடுத்து நானே நின்று இறுதி வரை விளையாடி அணியை வெற்றி பெற வைக்கலாம் என்று இருந்தேன். ஆனால் எதிர்ப்பாரத விதமாக ஆட்டமிழந்ததால் அதை நான் செய்ய முடியாமல் போனது.

ஆனால், இந்த வெற்றியை எங்கள் அணிக்காக ராகுல் தெவாடியா மற்றும் ரஷித் கான் மிகவும் சிறப்பாக செய்தனர். அதனால் ஒரு அணியின் கேப்டனாக நான் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறேன். மேலும், கடைசி பந்தில் ஒரு போட்டியை வெல்வது எப்போதுமே ஒரு சிறந்த தருணமாக இருக்கும்”, என்று போட்டி முடிவடைந்த பிறகு குஜராத் டைட்டன்ஸ் கேப்டன் கில் பேசி இருந்தார்.

author avatar
அகில் R
நான் அகில் R, மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் பட்டதாரியான நான் கடந்த 6 மாத காலமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம் ஆகியவற்றில் செய்திகளை எழுதி வருகிறேன்.