தமிழக அரசு விரைந்து மீட்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் – ராகுல் காந்தி கோரிக்கை

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள அச்சங்குளம் எனும் கிராமத்தில் இயங்கி வரக்கூடிய  பட்டாசு ஆலையில் இன்று பிற்பகல் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.இந்த வெடி விபத்தில் 12 பேர் உயிர் இழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வெடி விபத்து குறித்து காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில், விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும் மாநில அரசு விரைந்து மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.