40 மில்லியன் பார்வையாளர்களை பெற்ற வாத்தி கம்மிங்..!

0
165

மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் வீடியோ பாடல் தற்போது யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். 

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த மாதம் 13 ஆம் தேதி வெளியான திரைப்படம் மாஸ்டர். இந்த படத்தில் நடிகை மாளவிகா மோகனன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். மேலும் நடிகை ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள். வெளியான நாட்களில் இருந்து தற்போது வரை இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுவருகிறது. உலகளவில் தற்போது வரை 248 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் சேவியர் பிரிட்டோ நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்திருந்தார். இந்த படத்திலிருந்து வெளியான அணைத்து பாடல்களும் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் கடந்த மாதம் இந்த படத்திலுள்ள வாத்தி கம்மிங் வீடியோ பாடலை வெளியீட்டனர். அந்த பாடல் பட்டையை கிளப்பி வருகிறது தற்போது யூடியூபில் 40 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.