2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை – எல்.முருகன்

சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை என்று எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதற்காக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தலுக்கு தயாராகி வருகின்றது.இதனிடையே தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில், 2021 சட்டமன்றத் தேர்தலில் நான் போட்டியிட போவதில்லை .சட்டமன்ற தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இல்லை. எனவே போட்டியிட மாட்டேன்.என்னுடைய சகோதர,சகோதரிகளை போட்டியிட்டு வெற்றிபெற வைப்பதே எனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,பெண்கள், தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்துபவர்களை காப்பாற்ற மு.க.ஸ்டாலின் முயற்சி  தாழ்த்தப்பட்ட மக்களை திமுக எம்.பிக்கள் தொடர்ந்து அவமதிக்கின்றனர் என்று தெரிவித்துள்ளார்.