கொரியாவின் ஹுண்டாய் நிறுவனம் இந்தியாவில் கார் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் இந்தியாவில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்நிறுவனம் புதியதாக ஒரு மாடல் காரை அறிமுகம் செய்துள்ளது.

Image result for Hyundai வென்யூ

வென்யூ என்ற புதிய ரக காரை தான் அறிமுகம் செய்ய உள்ளது.இந்நிலையில் தான் நிறுவனத்தின் அனைத்து தயாரிப்புகளுக்குமே அதிகபட்ச  தள்ளுபடியை  அறிவித்துள்ளது.

Image result for வெர்னா கார்

மேலும் இந்நிறுவனத்தின்  ஹூண்டாய் வெர்னா  ஐ20 மற்றும் கிராண்ட் ஐ10, சான்ட்ரோ,எக்ஸென்ட் என அனைத்து வகை  மாடல் கார்களுக்குமே  தள்ளுபடியை  அறிவித்துள்ளது.இது மட்டுமல்லாமல்  2013 ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட கிராண்ட் ஐ10 மாடல் 2017 ஆண்டில் மேம்படுத்தப்பட்ட ஒரு மாடலாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.
Image result for ஹுண்டாய் எக்ஸென்ட் கார்
இந்தாண்டுக்கான புதிய ரக கார்  அக்டோபரில் புதிய தலைமுறை கொண்ட கிராண்ட் ஐ10 ஆக வர உள்ளது.மேலும் இந்த காருக்கு அதிகபட்சமாக 95,000 சிறப்பு தள்ளுபடியை அளித்து அறிவித்துள்ளது.
Related image
மேலும் சில கார் வகைகளுக்கும் சிறப்பு தள்ளுபடியை இந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதன்படி ஹூண்டாய் எக்ஸென்ட்  கார் ரூ. 85,000 வரை தள்ளுபடி மற்றும் சான்ட்ரோ
கார் மாடலுக்கு .31,000 வரையும் மற்றும் வெர்னா மாடலுக்கு ரூ.30,000
ஹூண்டாய் ஐ 20 மற்றும் ஐ20 ஆக்டிவ் ஆகிய கார் மாடலுக்கும் ரூ.20,000  வரை தள்ளுபடி அளிக்கப்படும் என்றும்  அறிவித்துள்ளது.