காவல் ஆய்வாளரை கழுத்தில் கடித்த ஓட்டுநர் ! வைரலாகும் வீடியோ!

ராமநாதபுரத்தில் உள்ள பஜார் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் போக்குவரத்து

By murugan | Published: May 15, 2019 08:25 PM

ராமநாதபுரத்தில் உள்ள பஜார் பகுதியில் போக்குவரத்து சீரமைப்பு பணியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மற்றும் சக காவலர்கள் ஈடுபட்டு இருந்தனர்.அப்போது அங்கு அதிக அளவில் விறகு ஏற்றி வந்த டாட்டா ஏசி வாகனத்தை காவலர்கள் கை  காட்டி நிறுத்த கூறினார். ஆனால் அந்த வாகனம் நிற்காமல் சென்றது. இதனால் டாட்டா ஏசி வாகனத்தை விரட்டி பிடித்த காவல் ஆய்வாளர் விஜயகாந்த் டாட்டா ஏசி வாகனத்தின் ஓட்டுனர் கண்ணனை கன்னத்தில் அறைந்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே  தள்ளு முள்ளு ஏற்பட்ட ரோட்டில் கட்டி புரண்டு சண்டை போட்டனர். அப்போது காவல் ஆய்வாளர் விஜயகாந்த் கழுத்தில் ஓட்டுநர் கண்ணன் பலமாக கடித்துள்ளார்.இந்த சம்பவத்தில் காயமடைந்த காவல் ஆய்வாளர் விஜயகாந்த் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டார். மேலும் ஓட்டுநர் கண்ணன் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். https://youtu.be/nbV_EBnykic
Step2: Place in ads Display sections

unicc