இந்தோனேஷிய பரிதாபம் :"பசி ,பஞ்சம் ,பட்டினி" "1203 பேர் பலி" உணவுக்கு வழியில்லை , உணவுக்காக கடைகள் சூறை…!!

இந்தோனேஷியா கலேவேசியா தீவில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்குதலில் பாதிக்கப்பட்ட மக்கள் உண்ண உணவு இன்றி கடைகளை உடைத்து வருகின்றனர்.
இந்தோனேசியாவின் சுலவேஸி என்கின்ற தீவில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா வானிலை மையம், 3 முதல் 4 மீட்டர் அளவுக்கு சுனாமி அலை வரலாம் என்று எச்சரிக்கை கொடுத்தது அதே போல இந்தோனேஷியா கலேவேசியா தீவை வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கியது.

இதில் ஏராளமான சேதங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்கை முடங்கி முழுவதும் பாதிக்கப்பட்டது. உயிர் சேதம் அதிகரிக்கும் என்ற அடிப்படையிலே எண்ணிக்கை அறிவித்து வந்தனர்.இந்நிலையில் தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 1203_ ஐ எட்டியுள்ளது.மின்சாரம் , தொலைத்தொடர்பு வசதியின்மை காரணமாக மீட்பு பனி தாமதம் என்றும் பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது.மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.அதுமட்டுமில்லாமல் உண்ண உணவு இல்லாமல் தற்போது மக்கள் உணவுக்காக அங்கே இருக்கும் கடைகளை உடைத்து சூறையாட தொடங்கியுள்ளனர்.
DINASUVADU 

author avatar
Dinasuvadu desk

Leave a Comment