பாலிவுட்டை போல விஜய் அஜித் சந்திப்பு நடந்தால் எப்படி இருக்கும்.? சூப்பர் ஹீரோஸ் மீட்டிங் அப்டேட்.!

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கும் ஷாருக்கான் மற்றும் சல்மான் கான் இருவருமே நெருங்கிய நண்பர்கள். சினிமாவிற்குள் போட்டி இருந்தாலும் கூட இருவருமே மிகவும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒன்றாக நேரம் செலவழிப்பது, பிறந்த நாளிற்கு நேரில் சென்று வாழ்த்துவது என நட்புடன் இருக்கிறார்கள்.  அந்த வகையில், இன்று நடிகர் சல்மான் கான் 57-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

ShahRukhKhan And SalmanKhan
ShahRukhKhan And SalmanKhan Image Source Twitter

அவருக்கு சினிமா பிரபலங்கள் மற்றும், ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இவரது பிறந்த நாளை முன்னிட்டு இன்று பார்ட்டி ஒன்றும் நடைபெற்றது.  அந்த பார்ட்டிக்கு பல முக்கிய பிரபலங்களும் வருகை தந்தனர். குறிப்பாக அதிகாலை 3 மணிக்கே நடிகர் ஷாருக்கான் வருகை தந்து சல்மான் கானுக்கு தன்னுடைய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து அன்புடன் முத்தமிட்டார். அதற்கான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ShahrukhKhan Graces SalmanKhan Birthday Bash
ShahrukhKhan Graces SalmanKhan Birthday Bash Image Source Twitter

இந்த வீடியோவை பார்த்த பல தமிழ் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் இவர்களை போலவே, தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் – விஜய் சந்தித்து தங்களது அன்பை பரிமாற்றி கொண்டால் நன்றாக இருக்கும் என ஆசையுடன் கருத்துக்களை கூறி வருகிறார்கள்.

இதையும் படியுங்களேன்- அவதூறு பரப்பிய நடிகை மீது வழக்கு…! இரண்டாவது திருமணம் உண்மை…மாரி பட இயக்குனர் அதிரடி ..!

Vijay And Ajith
Vijay And Ajith Image Source Twitter

இவர்களுடைய ஆசை நிறைவேறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும். அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படமும், விஜய் நடித்துள்ள வாரிசு திரைப்படமும் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment