நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரிப்பு.. உ.பி.யில் தான் அதிகபட்சம்!

இந்தியாவில் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு 5% அதிகரித்துள்ளது என்ற புள்ளிவிவரத்தை வெளியிட்ட அரசு.

கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியாவில் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5% அதிகரித்துள்ளது என்று மத்திய அரசின் புள்ளி விவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.

2022-இல் அதிகபட்சமாக நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள் உத்தரபிரதேசத்திலும், இதன்பின் மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம் மற்றும் பீகாரிலும் பதிவாகியுள்ளன. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) படி, ஒன்பது இந்தியர்களில் ஒருவருக்கு வாழ்நாளில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment