குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை செய்வது எப்படி?

குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை. இன்று நாகரீகம் என்கின்ற

By leena | Published: Feb 11, 2020 04:14 PM

குழந்தைகளுக்கு பிடித்ததமான அசத்தலான பீட்ரூட் வடை. இன்று நாகரீகம் என்கின்ற பெயரில் குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை கொடுப்பதை விட்டுவிட்டு, உடல் அஆரோக்யத்தை கெடுக்கக் கூடிய உணவுகளை தான் அதிகமாக கொடுக்கிறோம். தற்போது இந்த பாதியில், மாலை நேரங்களில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு ஏற்ற சத்தான பீட்ரூட் வடை செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையானவை

  •  பீட்ரூட்- 4
  •  வெங்காயம் - ஒரு கப்
  •  துவரம் பருப்பு - 200 கிராம்
  •  காய்ந்த மிளகாய்- 6
  •  சீரகம் - அரை டீஸ்பூன்
  •  உப்பு - தேவைக்கேற்ப
  •  எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை

முதலில் துவரம் பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, அதனுடன் காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை சேர்த்து வடை பதத்திற்கு வரும் வரை அரைத்துக் கொள்ள வேண்டும். பீட்ரூட்டை துருவி கடாயில் எண்ணெய் சேர்க்காமல் லேசாக வறுத்துக்.கொள்ள வேண்டும். பின் இதனோடு நறுக்கிய வெங்காயம் சேர்த்து 2 நிமிடங்கள் வறுத்து உப்பு மற்றும் அரைத்த விழுதினை சேர்க்கவேண்டும். தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து சிறு உருண்டைகளாக செய்து வடை போல் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும் இப்போது சுவையான பீட்ரூட் வடை தயார்.  
Step2: Place in ads Display sections

unicc