முதலில் பின்னடைவு ,சிறிது நேரத்தில் முன்னிலை ! ஒருவழியாக வெற்றிபெற்ற டெல்லி துணை முதல்வர்

டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 69652 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.

70 உறுப்பினர்களைக் கொண்ட டெல்லி சட்டப்பேரவையின் நடப்பு பதவிக் காலம் இந்த மாதத்துடன் நிறைவு பெறுகிறது. டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து வருகிறது.அரவிந்த் கெஜ்ரிவால் முதலமைச்சராக இருந்து வருகிறார்.இந்த ஆட்சி நிறைவு பெற உள்ள நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டது.அதன்படி  டெல்லியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வருகிறது.எனவே டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா முதலில்  பின்னடைவை சந்தித்தார்.இதன் பின்னர் முன்னிலை பெற்றார்.தற்போது டெல்லி பட்பர்கஞ் தொகுதியில் டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா 69652 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரவீந்தர் சிங்  66261 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்துள்ளார். 3391 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளார் மணீஷ் சிசோடியா.