காப்பியடித்து எடுக்கப்பட்ட திரைப்படத்திற்கு இத்தனை விருதுகளா? பாரசைட் திரைப்படம் குறித்து கலாய்க்கும்இணையவாசிகள்!

காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 92 வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இந்த விருது வழங்கும் விழாவில் பல திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட நிலையில்,  கொரியன் படமான பாரசைட் திரைப்படம் 4 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

இப்படம் சிறந்த திரைப்படம், திரைக்கதை, வெளிநாட்டு படம், இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் இப்படத்துக்கு விருதுகள் வழங்கப்பட்டது. ஆங்கிலம் அல்லாத பிற மொழி திரைப்படத்தில் இருந்து எடுக்கப்பட்ட முதல் திரைப்படம் என்ற வரலாறு சாதனை படைத்துள்ளது.

இப்படத்திற்கு பலரும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் இப்படம்  1999 ஆம் ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான மின்சார கண்ணா திரைப்படத்தின் கதையை தழுவி எடுக்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வைரலாக பரவி வருகிறது. மேலும் காப்பியடித்து எடுக்கப்பட்ட படத்திற்கு இத்தனை விருதுகளா என்றும் இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.