#BREAKING: ஓ.பி.எஸ்-க்கு அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு..!

ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு.

தொழிலதிபர் சேகர் ரெட்டி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை நடத்திய சோதனை நடத்தியது. அந்த சோதனையின் போது அவரது அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு  எதிராக வருமானவரி நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2015- 16-ஆம் ஆண்டு ரூ. 20 லட்சம், 2017 – 18-ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி என மொத்தம் ரூ. 82.32 கோடி வரி செலுத்த வேண்டுமென வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது. இதைத்தொடர்ந்து, வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்-க்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது. மேலும், ஓ.பன்னீர்செல்வம் நோட்டீஸ்க்கு பதில் அளிக்குமாறு வருமான வரித்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

author avatar
murugan