பிரதமர் மோடி வருகை.! உச்சகட்ட பாதுகாப்பில் மதுரை விமான நிலையம்.! 3 நாளுக்கு அதிரடி தடை…

பிரதமர் மோடியின் தமிழக வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சி தொடக்கவிழாவை தொடங்கி வைக்க பிரதமர் மோடி தமிழகம் வந்திருந்தார். அதன் பிறகு இரண்டாவது முறையாக பிரதமர் மோடி வரும் 11ஆம் தேதி தமிழகம் வர உள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி , காந்தி கிராமத்தில் உள்ள காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க்க பிரதமர் மோடி வருகை தரவுள்ளார். இந்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மதுரை விமான நிலையத்திற்கு தனி விமானம் மூலம் பிரதமர் மோடி வரவுள்ளார். அங்கிருந்து மோடி, ஹெலிகாப்டர் மூலம் காந்தி கிராமம் செல்ல உள்ளார் இதற்காக காந்தி கிராமத்தில் ஹெலிபேட் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 பிரதமர் வருகையை ஒட்டி, மதுரை விமான நிலையத்திற்கு உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இன்று முதல் 3 நாட்கள் விமான நிலைய உள் வளாகத்தில் பார்வையாளர்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. காந்தி புரம் தற்போது மத்திய பாதுகாப்பு படையினர் வசம் சென்றுள்ளது. அவர்கள் போக, சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பிரதமர் மோடியை வரவேற்க பாஜகவினர் தீவிர ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதே போல, கரூர் வந்து கரூரில் இருந்து மதுரை பைபாஸ் சாலை வழியாக தமிழக முதல்வர் ஸ்டாலின் வரவுள்ளதால், பைபாஸ் சாலையில் திமுகவினர் வரவேற்க்கும் வேலைகளில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment