வெள்ளத்தில் மூழ்கிய துபாய்…75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை.!

Dubai floods: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கடந்த 75 ஆண்டுகளில் இல்லாத அளவில் கனமழை பெய்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரலாறு காணாத கனமழை பெய்து, முக்கிய நெடுஞ்சாலைகளில் வெள்ளம் மற்றும் துபாய் சர்வதேச விமான நிலையம் சீர்குலைந்துள்ளன. இது கடந்த 75 ஆண்டுகளில் பெய்த மிகப்பெரிய மழை என்று அரசாங்கம் கூறியுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா, அபுதாபி உள்ளிட்ட பகுதிகளில் வெறும் 12 மணி நேரத்தில் இடைவிடாமல் கொட்டித் தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அந்த வெள்ளத்தில் சாலைகளில் நின்றுகொண்டிருந்த கார்களும் வெள்ளத்தில் அடித்து இழுத்து செல்லப்பட்டது.

மேலும் இந்த கனமழையால், துபாய், சார்ஜா, அபுதாபி உள்ளிட்ட நகரங்களில் வாழும் மக்களின் இயல்பு வாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தில் சிக்கிய ஓமானில் 18 பேர் உயிரிழந்தனர் என்று ஏஜென்ஸ் பிரான்ஸ்-பிரஸ் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், அங்கு நாடு முழுவதும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், சென்னையில் இருந்து துபாய், சார்ஜா, குவைத் நாடுகளுக்கு செல்லும் 10 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.