முதல்வரின் தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும் – எச்.ராஜா

போதை பொருளை ஒழிக்க முதல்வர் உறுதியேற்றது உண்மையானால், அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான் என எச்.ராஜா ட்வீட்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க  அறிவுறுத்தி இருந்தார்.

பாஜக  மூத்த தலைவர் எச்.ராஜா அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர்  பக்கத்தில்,’போதை பொருட்களைஒழிக்க புதிய திட்டம். சட்டங்களை கடுமையாக்க முதல்வர் உறுதி என்பது உண்மையானால் அவர் செய்ய வேண்டிய முதல் பணி அனைத்து மதுக்கடைகளையும் உடனே மூடுவதுதான். அவர்தகப்பனார் செய்த தவறை அவர் உடனடியாக சரி செய்ய வேண்டும்.’ என  பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.

Leave a Comment