கிராமத்து இளைஞனாக “விருமன்” கார்த்தி.! தெறிக்கும் திரை விமர்சனம் இதோ…

கிராமத்து பின்னணியைக் கொண்ட விருமன் திரைப்படத்தை முத்தையா இயக்கியுள்ளார். நடிகர் சூர்யா இந்த படத்தைத் தயாரித்துள்ளார். நடிகர்கள் கார்த்தி, அதிதி சங்கர் ஆகியோருடன் பிரகாஷ் ராஜ், ராஜ் கிரண், ஆர்.கே.சுரேஷ், சூரியும் நடித்துள்ளனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இன்று இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியானது. இதற்கு முன்பு முத்தையா- கார்த்தி கூட்டணியில் வெளியான கொம்பன் திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதால் விருமன் படத்தின் மேல் மிகப்பெரிய எதிர்பார்பு இருந்தது.

viruman

கிராமத்து கதையில் உருவாகும் படங்களை இயக்கும் சிறந்த இயக்குனர் முத்தையா ஒரு போதும் குடும்ப ரசிகர்களை ஏமாற்றியதே இல்லை. அதைப்போல, விருமன் படத்திலும்  மாற்றம் இல்லாமல் சிறப்பாக மீண்டும் கிராமத்து கதைக்களத்தை இயக்கியுள்ளார்.

கதைக்களம் : 

விருமன் படத்தின் கதைப்படி, பிரகாஷ்ராஜ், சரண்யா பொன்வண்ணன் தம்பதிக்கு மொத்தம் 4 குழந்தைகள் பிறக்கிறது. அதில் 4-வது குழந்தை ஹீரோ கார்த்தி. படத்தில் ஏதோ சில சூழ்நிலையால் சரண்யா பொன்வண்ணன் இறப்புக்கு பிரகாஷ்ராஜ் காரணமாகி விடுகிறார்.

எனவே இதனால் , கார்த்தி தனது தந்தை பிரகாஷ்ராஜ் மீது கடும் கோபத்தில் இருக்கிறார்.  அதை வைத்து கதைக்களம் நகர்கிறது.  பிறகு வில்லனாக நடித்துள்ள ஆர்.கே.சுரேஷ் என்னவெல்லாம் செய்து திட்டம் தீட்டினார். கார்த்திக்கும் ஆர்.கே.சுரேஷ்கும் எப்படி பிரச்சனை வந்தது.

அப்பாவும் (பிரகாஷ் ராஜ்) மகனும் (கார்த்தி) சேர்ந்தார்களா..? இல்லையா..? இறுதிக்காட்சியில்  என்ன ஆனது ஆர் கே சுரேஷ் நிலைமை என்னானது என்பதை மீதி கதையின் சுவாரசியமாக ரசிகர்களுக்கு கொடுத்திருக்கிறார் இயக்குனர் முத்தையா.

விமர்சனம் :

படத்தில் கார்த்தியின் நடிப்பு வழக்கம் போல மிகவும் அருமையாக இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசை கதைக்கு ஏற்றது போல பிண்ணனி இசையும் அருமையாக கொடுத்திருக்கிறார். படத்தின் பாடல்கள் படத்திற்கு பெரிய பிளஸ் என்ற கூறலாம்.

கதாநாயகி அதிதி சங்கர் படத்தில் மிகவும் அற்புதமாக நடித்துள்ளார் என்றே கூறலாம் முதல் படம் என்ற பதட்டமே இல்லாத அளவிற்கு தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

மற்றபடி, படத்தின் கதைக்களம் ஏற்கனவே பார்த்து பழக்கப்பட்ட கதைகளம் போல இருப்பதால் , அடுத்து இதுதான் நடக்கப்போகிறது என்பதை படம் பார்க்கும் போதே எளிதில் கணிக்க முடிகிறது. இது தான் மைனஸ் என்று கூட கூறலாம்.  மொத்தத்தில் விருமன் படம் ஒரு நல்ல  குடும்ப திரைப்படம். எனவே கிராமத்து படங்களை விரும்பி பார்ப்பவர்கள் திரையரங்கிற்கு சென்று படத்தை கண்டிப்பாக படத்தை பார்க்கலாம்

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.

Leave a Comment