அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது – சு.வெங்கடேசன் எம்.பி

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது என சு.வெங்கடேசன் எம்.பி ட்வீட்.

சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டுக்கள், நினைவுச்சின்னங்கள் உதகைக்கு மாற்றப்பட்டு, அதன்பின் கடந்த 1966ம் ஆண்டு மைசூருக்கு கொண்டுசெல்லப்பட்டது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்று வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டது. அதன்படி தமிழ் சார்ந்த கல்வெட்டுகள் அனைத்தும் இனி தமிழகத்திற்கு இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும்,  இதுவரை துணைக் கல்வெட்டு கண்காணிப்பாளர்கள் அலுவலகம் தென்சரகம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘தமிழ்க் கல்வெட்டுகள் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகம்’ என அழைக்கப்படும் என்றும் இந்திய தொழில்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

இதற்கு பலரும் பாராட்டு தெரிவித்துள்ள நிலையில், சு.வெங்கடேசன் அவர்கள் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ‘அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்படி இந்திய தொல்லியல் துறை மைசூரில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை சென்னைக்கு மாற்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னை அலுவலகம் இனிமேல் “தமிழ் கல்வெட்டு அலுவலகம்” என்று அழைக்கப்படும்.’ என பதிவிட்டுள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.