நாகை சாமந்தன்பேட்டையில் தூண்டில் வளைவு – அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உறுதி!

சென்னை:நாகப்பட்டினம் மாவட்டம் சாமந்தன் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவுடன் கூடிய சிறு துறைமுகங்கள் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மீன்வளம்,மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவையின் 3-வது நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.சட்டமன்ற உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை ரீதியான அமைச்சர்கள் பதில் அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில்,சட்டபேரவையில் தற்போது நாகப்பட்டினம் சட்டமன்ற உறுப்பினர் ஆளுர் ஷா நாவாஷ்,சாமந்தன் பேட்டை கிராமத்தில் தூண்டில் வளைவுடன் சிறிய துறைமுகம் அமைக்கபடுமா? எனவும்,நாகை மாவட்ட கடற்கரை கிராமங்களில் கேள்வி எழுப்பினார்

இதற்கு பதிலளித்து பேசிய மீன்வளம்,மீனவர் நலத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்:”தூண்டில் வளைவு அமைக்கும் ஆய்வு பணிக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.அதன்படி,ரூ.15 லட்சம் செலவில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்”,என்று தெரிவித்துள்ளார்.