உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவு! ஜி.எஸ்.டி-யிலிருந்து விலக்கு அளிக்க கோரிய மனு ….

உயர்நீதிமன்ற மதுரை கிளை, 500 ரூபாய் விலைக்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு 5 சதவீத ஜி.எஸ்.டி. வசூல் செய்வதில் இருந்து விலக்கு அளிக்க கோரிய மனு தொடர்பாக , ஜி.எஸ்.டி, கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப  உத்தரவிட்டுள்ளது.

500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கும் 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி வசூல் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும் விற்பனையாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே 500 ரூபாய்க்கு கீழ் விற்கப்படும் காலணிகளுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி சுவாமிநாதன், வழக்கு தொடர்பாக ஜி.எஸ்.டி. கவுன்சில் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Leave a Comment