பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்வு – அமைச்சர் சாமிநாதன்

பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு. 

அமைச்சர் சாமிநாதன் அவர்கள் சட்டப்பேரவையில் சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அதன்படி, தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். பத்திரிக்கையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து, ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும் என்றும், பத்திரிக்கையாளர்களுக்கான மருத்துவ உதவித்தொகை ரூ.2 லட்சத்தில் இருந்து, ரூ.2.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.