டி.ஆர்.ஏ என்ற தனியார் அமைப்பு ஒன்று 16 நகரங்களில், அதிக நம்பகத்தன்மை மிக்க பிரபலங்கள் 2019 என்ற ஆய்வு நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், மக்கள் மத்தியில் அதிக நம்பக தன்மை கொண்ட பிரபலங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த பட்டியலில், இந்திய அளவில் அமிர்தாப் பச்சன் முதலிடத்திலும், அமீர்கான், சல்மான் கான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர். இந்நிலையில், தென்னிந்தியாவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதலிடத்திலும், தளபதி விஜய் இரண்டாம் இடத்திலும், மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார். இந்த பட்டியலில் நடிகர் அஜித்தின் பெயர் இடம் பெறவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here