திருச்சி காட்டுப்புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியை தான் நித்திய கமலா. இவர் தனது கணவருடன் வசித்து வருகிறார். இவருடைய குழந்தை பெயர் லத்திகா ஸ்ரீ. இந்த குழந்தை நேற்று தாய் நித்திய கமலா அடித்ததால் இறந்துவிட்டதாக கூறப்பட்டது.

அதாவது குழந்தை லத்திகா ஸ்ரீ படிக்காமல் டிவி பார்த்தால் கோபத்தில் தாய் நித்திய கமலா அடித்ததாகவும் அதனால் குழந்தை இறந்து விட்டதாகவும் கூறப்பட்டது.

இதனை வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கையில் முக்கிய தகவல்கள் வெளியாகின. குழந்தையின் தாய் நித்திய கமலாவிற்கு, ஏற்கனவே திருமணமாகி ஆகி உள்ளதாகவும், முதல் கணவர் பெயர் பிரசன்னா எனவும்தெரியவந்தது. அவர்கள் இருவருக்கும் பிறந்த குழந்தைதான் லத்திகா ஸ்ரீ.

பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக நித்திய கமலாவும் பிரசன்னாவும் விவாகரத்து பெற்றுவிட்டனர். இரண்டாவது திருமணம் செய்தவர் பெயர்தான் முத்து பாண்டியன். ஒருவேளை இரண்டாவது கணவர் ஏதேனும் கோபப்பட்டு சிறுமியை தாக்கியதால் குழந்தை உயிர் இழந்ததா என்கிற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

DINASUVADU

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here