விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி வேண்டும் ! உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு

விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி முறையீடு செய்யப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி பண்டிகை 22-ம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. கொரோனா பரவலை தடுக்க விழாக்களை  தவிர்க்கவும், பொது இடங்களில் மக்கள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனவே கொரோனா பரவலை தடுக்கவும்,பொதுமக்கள் நலன் கருதியும், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் நிறுவுவதோ, அல்லது சிலைகளை வைத்து விழா கொண்டாடுவதோ, விநாயகர் சிலைகளை பார்வாயாக எடுத்துச் செல்வதோ, சிலைகளை கரைப்பதோ தற்போது ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில் அனுமதிக்க இயலாது என்று தமிழக அரசு அறிவித்தது .எனவே, விநாயகர் சதுர்த்தி பண்டிகையை அவரவர் வீடுகளிலேயே கொண்டாட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும், பண்டிகை கொண்டாட தேவையான பொருட்களை வாங்க கடைகளுக்கு செய்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்றும் அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்  என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் பொதுஇடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபாடு செய்ய அனுமதி கோரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு  செய்யப்பட்டது.மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது.