கஜா புயல்  ரூ.1 கோடி நிவாரண நிதியை லைகா தயாரிப்பு நிறுவனம் அளித்துள்ளது.

கத்தி மற்றும் தற்போது வெளியாக ரெடியாக இருக்கும் 2.0 உள்ளிட்ட பல படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனமான லைகா நிறுவனம் தற்போது கஜா புயலுக்கு நிவாரண நிதியாக மிகப்பெரிய ஒரு தொகையை அறிவித்துள்ளது.

தமிழகத்தை மிரட்டிய கஜா பலத்த சேதத்தை ஏற்படுத்திய இந்த கஜாவால் மக்கள் வீடுகள் மற்றும் தங்கள் வாழ்வதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர்.பாதிப்புக்கு உள்ளான மக்களுக்கு மக்கள் ,இளைஞர்கள், நடிகர்கள் என அனைவரும் உதவி கரம் நீட்டி வருகின்றனர்.இந்நிலையில் ஒரு கோடியே ஒரு லட்சம் ரூபாய் கொடூர கஜா புயலால் பாதிக்கப்படைந்த 7 மாவட்டங்களிலும் நிவாரண பணிகளை மேற்கொள்ள லைகா குழுமம் இந்த தொகையை அளித்துள்ளது.

DINASUVADU