புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி…!புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி

காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

புதுச்சேரி மற்றும் காரைக்கால் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.ஏற்கனவே கஜா புயலால் அங்கு பாதிப்பு அதிகம் ஏற்பட்டது.

புதுச்சேரி, காரைக்காலில் கனமழை காரணமாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகளுடன் முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார். காரைக்காலில் நடைபெறும் மீட்புப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியரிடம் கேட்டறிந்தார் நாராயணசாமி.

இந்நிலையில்  ஆலோசனைக்கு பின்  காரைக்காலில் புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிதியுதவி வழங்கப்படும் என்று  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.கனமழையால் பாதிக்கப்பட்ட குடிசை வீடுகளில் உள்ள குடும்பங்களுக்கு தலா ரூ.2,000 நிதியுதவி என்றும் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மேலும் கஜா புயலால் பாதிக்கப்பட்ட காரைக்கால் மாவட்டத்திற்கு ரூ 187 கோடி நிவாரணம் வழங்க வேண்டும்.புயலில் முழுமையாக சேதமடைந்த 1,500 குடிசை வீடுகளுக்கு தலா ரூ 4,100 வழங்கப்படும்.புயல் நிவாரணம் குறித்து பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரிடம் நேரில் விளக்கம் அளிக்க வரும் 22-ம் தேதி நேரம் கேட்கப்பட்டுள்ளது என்றும்  புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

Leave a Comment