ஆதார் இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து.? மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

சரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி. 

மழைக்காலத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் சென்னையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது அவர் கூறுகையில், மீட்டர் வரையில் மட்டுமே மின்சாரத்துறை பொறுப்பு. அதற்கு பிறகு உரிமையாளர்கள் தான் ஜாக்கிரதையாக தங்கள் வீட்டில் மின் சாதனங்களை கட்டமைக்க வேண்டும். என குறிப்பிட்டார்.

மேலும், சென்னையில் இதுவரை 3000க்கும் அதிகமான பில்லர் பாக்ஸ் 1 மீ அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. 16 மின்மாற்றிகள் (டிரான்ஸ்பார்மர்) உயர்த்தி விட்டோம்.  என மழைநீர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து பேசினார்.

அதன் பிறகு, மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சொல்வதால் 100 யூனிட் மின்சார இலவசம் தடுக்கப்படும் என பொய்யான தகவல் பரவி வருகிறது. அது அப்படி இல்லை. இது கணக்கு வழக்குக்காக மட்டுமே. பலர் தங்கள் இறந்து போன தந்தை, தாய் பெயரில் இன்னும் பெயர் மாற்றாமல் உபயோகித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், சரியாக எதனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே இந்த நடவடிக்கை என குறிப்பிட்டு பேசினார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.

Leave a Comment