இனி ஆதாரை பிறப்பு சான்றிதழ் ஆவணமாக ஏற்றுக்கொள்ள முடியாது – EPFO

EPFO

பிறப்பு சான்றாக (DoB) ஏற்றுக்கொள்ளக்கூடிய பட்டியலில் இருந்து ஆதாரை நீக்கும்படி, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்புக்கு (EPFO), இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் ஆதார் அடையாள அட்டை, அனைத்து சேவைகளுக்கும் தேவைப்படும் ஒரு முக்கிய ஆவணமாக இருந்து வருகிறது. பணியில் சேர்வதில் தொடங்கி வங்கிகளில் கணக்கு தொடங்குவது, பிஎப், இபிஎப்ஓ கணக்குகள் என அனைத்திலும் ஆதார் தவிர்க்கமுடியாத ஆவணமாக உள்ளது. இதுபோன்று பல்வேறு சேவைகளுக்கு ஆதார், பிறப்புச் சான்று … Read more

10 ஆண்டுகளுக்கு முன்பு வாங்கிய ஆதார் கார்டை ஏன் புதுப்பிக்க வேண்டும்.?

10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்ட ஆதார் விவரங்களை புதுப்பிக்கபட வேண்டிய அவசியத்தை மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.  இந்திய குடிமகனின் தனிமனித அடையாளமாக கருதப்படும் ஆதார் அடையாள அட்டை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு 10 ஆண்டுகள் ஆகி உள்ள காரணத்தால் அதனை மீண்டும் புதுப்பிக்க மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், அதன் அவசியத்தையும் அதில் கூறியுள்ளது. மத்திய அரசால் வழங்கப்படும் 319 … Read more

தமிழகத்தில் 3.62 கோடி ஆதார் இணைப்பு ஓவர்… தேர்தல் ஆணையம் தகவல்.!

தமிழகத்தில் இதுவரை 3.62 கோடி பேரின் வாக்காளர் அடையாள எண் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளது. – தமிழக தேர்தல் தலைமை அதிகாரி சத்யபிரதாப் சாகு. இந்தியா முழுவதும் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்னரே தொடங்கிவிட்டது. இரட்டை வாக்குரிமை, இறந்துபோனவர்களுக்கு வாக்குரிமை என பல்வேறு குளறுபடிகளை தீர்க்க இந்த இணைப்பு உபயோகமாக இருக்கும் என கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆதார் – வாக்காளர் அடையாள அட்டை இணைப்பு விவரம் குறித்து … Read more

#Breaking :மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம் அறிவிப்பு.!

இம்மாதம் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க சிறப்பு முகாம்கள் நடைபெறும். ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைக்க வேண்டும் என மின்சாரத்துறை அறிவுறுத்திய நிலையில், தற்போதும் அதற்கான சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இந்த சிறப்பு முகாம்கள் தமிழகம் முழுவதும் வரும் 28ஆம் தேதி முதல் டிசம்பர் 31 வரையில் நடைபெறும் எனவும் மின்சாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பண்டிகை தினம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்து மற்ற தினங்களில் … Read more

ஆதார் இணைத்தால் இலவச மின்சாரம் ரத்து.? மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்.!

சரியாக எத்தனை பேர் இருக்கிறார்கள் என உபயோகிப்பாளர் கணக்குகளை சரிபார்க்க மட்டுமே ஆதார் எண் இணைக்கப்படுகிறது. – அமைச்சர் செந்தில் பாலாஜி.  மழைக்காலத்தில் தமிழ்நாடு மின்சாரத்துறை சார்பில் சென்னையில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறுகையில், மீட்டர் வரையில் மட்டுமே மின்சாரத்துறை பொறுப்பு. அதற்கு பிறகு உரிமையாளர்கள் தான் ஜாக்கிரதையாக தங்கள் வீட்டில் மின் சாதனங்களை கட்டமைக்க வேண்டும். என குறிப்பிட்டார். மேலும், சென்னையில் இதுவரை 3000க்கும் … Read more

வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ இணைப்பு – மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும்,தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும்.ஆனால்,ஆதார் எண் இல்லாதவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்படலாம் என்று கூறி ஆபத்தான இந்த தேர்தல் … Read more

இனி புதிதாக பிறந்த குழந்தைகளுக்கும் ‘ஆதார்’ – UIDAI திட்டம்!

இந்தியாவின் தனித்துவமான அடையாள ஆணையம்(UIDAI),ஆதார் தவறாகப் பயன்படுத்துவதையும்,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நன்மைகளை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்ட இரண்டு புதிய  திட்டங்களைத் தொடங்க திட்டமிட்டுள்ளது.அதன்படி,புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கும் இனி தற்காலிக ஆதார் எண்ணைப் பெற்றுக் கொள்ளும் வசதி கொண்டு வரப்படவுள்ளது எனவும்,பிறப்பு,இறப்பு தரவுகளை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில்,பிறக்கும்போதே ஒரு யுஐடிஏஐ எண்ணை ஒதுக்கீடு செய்வது குழந்தைகள் மற்றும் குடும்பங்கள்,மத்திய அரசின் திட்டங்களின் பயன்களை பெறுவதை உறுதி செய்யும் என்றும்,பிறப்பு, இறப்பு பதிவு தரவுத்தளங்களுடனும்,பொது … Read more

#ViralVideo:”உன் பெயர் முகமதுவா?”-மனநலம் பாதிக்கப்பட்ட முதியவரை அடித்தே கொன்ற பாஜக நிர்வாகி?..!

மத்தியப் பிரதேசத்தின் நீமுச் மாவட்டத்தில் இசுலாமியர் என நினைத்து ஜெயின் மதத்தை சேர்ந்த முதியவர் ஒருவரை பாஜக நிர்வாகி கடுமையாக தாக்கியதில் முதியவர் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் ரத்லாம் மாவட்டத்தின் சிர்சா கிராமத்தில் வசிக்கும் சற்று மனநலம் பாதிக்கப்பட்ட பவர்லால் ஜெயின் என்ற 65 வயது முதியவர்,ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற ஒரு மதம் சார்ந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தனது குடும்பதாருடன் சென்றிந்த நிலையில்,வழி தவறி காணாமல் போய்விட்டார்.இதனையடுத்து,அவரது குடும்பத்தினர் காவல்நிலையத்தில் புகார் … Read more

#Justnow:வாக்காளர் அடையாள அட்டையுடன் ‘ஆதார்’ இணைப்பு – தலைமை தேர்தல் ஆணையர் முக்கிய அறிவிப்பு!

இந்தியாவில் வாக்காளர் அடையாள அட்டையிலும், தேர்தலிலும் சில முக்கியமான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கோரிக்கை விடுத்து வரும் நிலையில்,வாக்காளர் அடையாள அட்டையுடன்,ஆதார் எண்ணை இணைக்க வகை செய்யும் தேர்தல் சீர்திருத்த மசோதாவுக்கு கடந்த ஆண்டு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. மத்திய அமைச்சரவை கருத்துப்படி,இந்த மசோதா மூலம் ஒருவர் பல வாக்காளர் அடையாள அட்டையை பயன்படுத்துவதை தடுக்க முடியும் என்பதாகும். மேலும்,பெண் ராணுவ அலுவலர் வெளியூர் சென்றால் அவருக்கு பதில் கணவர் … Read more

மக்களே..! இனிமே இதற்கு ஆதார் கட்டாயம்..! – தமிழக அரசு

உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுவாக சிறிய வயதில் உயிரிழந்தவர்கள், மூளை சம்பந்தமான பிரச்சனை உள்ளவர்கள், விபத்தில் உயிரிழந்தவர்கள் போன்றவர்களின் உடலுறுப்புகள் அவர்களின் விருப்பத்திற்கிணங்க தானம் செய்யப்படுவதுண்டு. இதற்கு, சில கட்டுப்பாடும் இருந்தாலும், தற்போது அத்தமிழக அரசு ஒரு புதிய கட்டுப்பாட்டை விதித்துள்ளது. அதன்படி, உடல் உறுப்புகளை தானமாக பெறுவதற்கும், வழங்குவதற்கும் ஆதார் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. உடல் உறுப்பு தானத்திற்கு ஆதார் கட்டாயம் … Read more