அமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி!

அமெரிக்காவில் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக  பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், உலக அளவில் கொரோனா பாத்தில், வல்லரசு நாடான அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.

 இந்நிலையில், அந்நாட்டு அரசு, இந்த ஆண்டு இறுதிக்குள் அமெரிக்காவில் கொரோனா தடுப்பு மருந்து பயன்பாட்டிற்கு வரும்  என்றும், இதனை அனைத்து மக்களுக்கும் இலவசமாக விநியோகிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அந்நாட்டு சுகாதாரத்துறை  மூத்த அதிகாரி பால் மாங்கோ அவர்கள் கூறுகையில், 6 தடுப்பூசி திட்டங்களில் வாஷிங்டன் 10 பில்லியன் டாலருக்கும் அதிகமாக (சுமார் ரூ. 74,000 கோடி)  முதலீடு செய்துள்ளது என்றும், நூற்றுக்கணக்கான மில்லியன் டோஸ் வழங்குவதற்கான உத்தரவாத ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.