வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் உயர்ந்த ஒரு லிட்டர் பெட்ரோல் விலை…!

வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.100.13 க்கு விற்பனை.

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயித்துக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.அதன்படி, தினமும் பெட்ரோல்,டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.

இந்தியாவில் கொரோனா காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, மக்களின் அன்றாட வாழ்க்கை பாதித்துள்ள நிலையிலும்,பெட்ரோல்,டீசல் விலையானது ஒவ்வொரு நாளும் அதிகரித்து வருகிறது.

அதன்படி,சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 99.80 ரூபாய், டீசல் லிட்டர் 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில்,வரலாற்றில் முதல்முறையாக சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 100.13 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.மேலும்,டீசல் விலை லிட்டருக்கு 93.72 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.ஆனால்,ஏற்கனவே பல மாநிலங்களில் பெட்ரோல் விலை சதம் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • டெல்லி – பெட்ரோல்: ரூ .99.16 | டீசல்: ரூ .89.18.
  • மும்பை – பெட்ரோல்: ரூ .105.24  | டீசல்: ரூ .96.72.
  • கொல்கத்தா – பெட்ரோல்: ரூ .99.04  மற்றும் டீசல்: ரூ .92.03
  • கேரளா  – பெட்ரோல்: ரூ .100.85, டீசல் விலை: ரூ .94.29.

பெட்ரோல் மற்றும் டீசல் குறிக்கும் விலைகள் பற்றி தெரிந்துகொள்ள 

உங்கள் நகரம் / நகரத்தில் எரிபொருளின் விலைகளை (பெட்ரோல் / டீசல்) தெரிந்துகொள்ள நீங்கள் “RSP <space>Dealer Code of Petrol Pump”  என்று மெசேஜ் டைப் செய்து 92249 92249 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும். எடுத்துக்காட்டாக, எஸ்.எம்.எஸ். டெல்லியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைக்கு “RSP 102072” to  92249 92249 வரை ஐ.ஓ.சி.எல் வலைத்தளத்திலிருந்து IOCL டீலர் குறியீடுகளைப் பெறலாம்.