கால்பந்து வீராங்கனை உயிரிழப்பு; உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்!

கால்பந்து வீராங்கனை பிரியாவின் உடலை கொண்டு செல்ல எதிர்ப்பு தெரிவித்து உறவினர்கள், நண்பர்கள் போராட்டம்.

சென்னையில் கால் அகற்றப்பட்ட கால்பந்து வீராங்கனை பிரியா (17) ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் வலது கால் முட்டி சவ்வு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்கு ஏற்பட்ட சிக்கலால் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி பிரியாவின் கால் அகற்றப்பட்டது. கால் அகற்றப்பட்ட்ட நிலையில், பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.

கவனக்குறைவு மற்றும் தவறான சிகிச்சையால் மாணவி பிரியா இறந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மாணவி பிரியாவின் பிரேத பரிசோதனை நிறைவு பெற்றது. உடலை பார்த்து உறவினர்கள், நண்பர்கள் கதறி அழுதனர். இந்த நிலையில், பிரேத பரிசோதனை நிறைவு பெற்றதை தொடர்ந்து, கால்பந்து வீராங்கனை ப்ரியாவின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள், நண்பர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கவனக்குறைவாக சிகிச்சையளித்து மருத்துவர்களை கைது செய்ய கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உடல் வைக்கப்பட்டுள்ள வாகனத்தை மறைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிரியாவின் உறவினர்கள், நண்பர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment