நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவ வேண்டும் – கமல்ஹாசன்

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவில் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இதுவரை 909 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 பேர் உயிரிழந்துள்ளனர். வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு 144 தடை போடப்படியுள்ளது. இதனால் பல்வேறு தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரம் இழப்பு சந்தித்துள்ளது. 

இந்த நிலையில் தமிழகமும் ஊரடங்கு உத்தரவில் இருப்பதால் அனைத்தும் மூடப்பட்டுள்ளது. இதனை மாநில அரசு கருத்தில் கொண்டு மக்களுக்கு பல சலுகைகளை அறிவித்து வருகிறது. இது குறித்து கமல்ஹாசன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டுள்ளார். அதில், தமிழகத்தில் இருக்கும் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்களும் இசைக்குழுவினரும், கோவில் திருவிழாக்களை நம்பி வாழ்வு நடத்துபவர்கள் என்றும் அரசு அறிவித்திருக்கும் உதவித் திட்டங்களில் அவர்கள் பெயரையும் இணைத்துக் கொண்டால் வாழ்வாதாரமில்லா நிலையில், அவர்களும் கவலையின்றி பசியாறுவர் என பதிவிட்டுள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்