#Flash:அதிமுக பொதுக்குழுவில் ‘QR Code’ அடையாள அட்டை – ஈபிஎஸ் தரப்பு புதிய முயற்சி!

சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்ற நிலையில்,பொதுக்குழுவுக்கு போலி அடையாள அட்டையுடன் பலர் வந்திருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதனைத் தொடர்ந்து,ஜூலை 11 ஆம் தேதி அடுத்த பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில்,அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,2665 பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு போலி அடையாள அட்டையுடன் வருபவர்களை தடுக்க QR  தொழில்நுட்பத்திலான அடையாள அட்டைகள் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு கூட்டத்திற்கு முதல் நாள் இரவு தரப்படவுள்ளன. இதனைத் தொடர்ந்து,பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்கள் கட்டாயம் QR Code அடையாள அட்டையுடன் வருகை புரிய வேண்டும் எனவும்,QR Code பரிசோதித்த பிறகே பொதுக்குழு உறுப்பினர்கள் அரங்கிற்குள் அனுமதிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும்,இதன்மூலம் பொதுக்குழுவுக்கு வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கையை ஆன்லைனில் பதிவு செய்யமுடியும் என்பதால் ஈபிஎஸ் தரப்பு இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment