மக்களவை தேர்தல்: குறைந்தபட்ச ஊதிய உயர்வு, சுகாதாரம்..! தொழிலாளர்களுக்கான காங்கிரஸின் 5 வாக்குறுதிகள்

Congress: மக்களவை தேர்தலில் வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் தொழிலாளர்களுக்கு சுகாதார உரிமை, குறைந்தபட்ச ஊதிய உயர்வு உள்ளிட்ட ஐந்து முக்கிய உத்தரவாதங்களை காங்கிரஸ் கட்சி அளித்துள்ளது. பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, மத்தியில் ஆட்சிக்கு வந்தால், இந்த வாக்குறுதிகளை செயல்படுத்துவோம் என கூறினார்.

காங்கிரஸின் ஐந்து வாக்குறுதிகள் என்னென்ன?

ஆரோக்கியத்திற்கான உரிமை

தொழிலாளர்களுக்கான சுகாதார உரிமைகள் குறித்த புதிய சட்டம் உருவாக்கப்படும், அமைப்பு சாரா துறை தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இந்த திட்டங்களின் கீழ் பலன் பெறலாம், மேலும் ஏழைகளுக்கு இலவச அத்தியாவசிய நோய் கண்டறிதல் சிகிச்சைகள், மருந்துகள், அறுவை சிகிச்சை வழங்கப்படும்.

Read More – தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்..! ’இந்தியா’ கூட்டணியால் மக்களுக்கு ஏமாற்றம்: பிரதமர் மோடி

குறைந்தபட்ச ஊதிய உயர்வு

தேசிய அளவில் குறைந்தபட்ச ஊதியம் நாள் ஒன்றுக்கு ரூ.400 ஆக உயர்த்தப்படும், மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியம் ரூ.400 ஆக உயர்த்தப்படும்

நகர்ப்புற வேலைவாய்ப்பு

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ’ஷெஹ்ரி ரோஸ்கர் யோஜனா’ (நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம்) கீழ் நகர்ப்புறங்களில் வேலைகளை உறுதி செய்வதற்காக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தை கொண்டு வரும் என கூறப்பட்டுள்ளது.

Read More – விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19… இடைத்தேர்தலுக்கான முழு அட்டவணை இதோ!

சமூக பாதுகாப்பு

ஆயுள் காப்பீடு மற்றும் விபத்துக் காப்பீடு உட்பட அனைத்து அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் ‘சமாஜிக் சுரக்ஷா’ (சமூகப் பாதுகாப்பை) காங்கிரஸ் உறுதி செய்யும்.

Read More – மக்களவை தேர்தல்… எந்தந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு!

பாதுகாப்பான வேலைவாய்ப்பு

பாஜக அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்ட தொழிலாளர் விரோத சட்டங்கள் மறு ஆய்வு செய்யப்படும் மற்றும் தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாக்க உரிய புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்படும், முக்கிய அரசு பணிகளில் ஒப்பந்த முறை தடுத்து நிறுத்தப்படும்.

Leave a Comment