தமிழகத்தில் 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு

Election Commission: தமிழகத்தில் தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்யாத 27 வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, சிவகங்கை மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட செந்தில் குமார் மற்றும் சட்டசபை தொகுதிகளில் போட்டியிட்ட 26 வேட்பாளர்கள் உள்ளிட்டோர் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Read More – எம்.எல்.ஏவாக தொடரும் பொன்முடி..! திருக்கோவிலூருக்கு இடைத்தேர்தல் இல்லை என அறிவிப்பு

மக்கள் பிரதநிதித்துவ சட்டத்தின் படி தேர்தல் கணக்குகளை தாக்கல் செய்யாத 27 பேர் தகுதி நீக்கம் செய்யபட்டுள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்கள் தேர்தல் கணக்குகளை குறிப்பிட்ட நாட்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்பது விதிமுறையாகும்.

Read More – Elections2024 : தேர்தல் அட்டவணை அறிவிப்பு! தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன!

விதிமுறையின்படி தாக்கல் செய்யாதவர்கள் 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாத வகையில் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள். அதன்படி, 2021 முதல் 2024 மார்ச் 15-ம் தேதி வரை தகுதி நீக்கம் செய்யப்பட்ட வேட்பாளர் பட்டியலை இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment