தேர்தலை எதிர்கொள்ள பாஜக தயார்..! ’இந்தியா’ கூட்டணியால் மக்களுக்கு ஏமாற்றம்: பிரதமர் மோடி

Narendra Modi: மக்களவை தேர்தலை எதிர்கொள்ள பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தயாராக உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். தேர்தலானது 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. முதல் கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவுள்ளது.

Read More – விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கு ஏப்ரல் 19… இடைத்தேர்தலுக்கான முழு அட்டவணை இதோ!

இந்நிலையில், பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழா இங்கே..! 2024 மக்களவைத் தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. பாஜக – தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு முழுமையாக தயாராகி விட்டோம்.

நல்லாட்சி மற்றும் துறைகள் முழுவதும் சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் செல்கிறோம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, நாங்கள் பதவியேற்பதற்கு முன்னர், இந்திய மக்கள் ’இந்தியா’ கூட்டணியின் பரிதாபகரமான நிர்வாகத்தால் ஏமாற்றம் அடைந்தனர்.

Read More – மக்களவை தேர்தல்… எந்தந்த மாநிலங்களில் எத்தனை கட்டங்களாக வாக்குப்பதிவு!

140 கோடி இந்தியர்களால் இயங்கும் நமது நாடு வளர்ச்சியில் புதிய சாதனைகளை படைத்து வருகிறது. ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியுள்ளோம், கோடிக்கணக்கான மக்களை வறுமையில் இருந்து விடுவித்துள்ளோம். எங்களின் திட்டங்கள் இந்தியாவின் அனைத்துப் பகுதிகளையும் சென்றடைந்துள்ளது.

Read More – மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது..! 100% பாதுகாப்பானது: தலைமை தேர்தல் ஆணையர் உறுதி

வறுமை மற்றும் ஊழலுக்கு எதிரான போர் இன்னும் வேகத்தில் செல்லும். சமூக நீதிக்கான முக்கியத்துவம் வலுவாக இருக்கும். உலகப் பொருளாதாரத்தில் மூன்றாவது பெரிய நாடாக இந்தியாவை மாற்றுவதற்கு நாங்கள் உழைக்கப் போகிறோம். இளைஞர்களின் கனவுகளை நனவாக்கும் எங்கள் முயற்சியை மேலும் வலுப்படுத்துவோம்” என தெரிவித்துள்ளார்.

Leave a Comment