குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் ! வாகனங்களுக்கு தீ வைப்பு

  • குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. 
  • உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற போராட்டத்தில் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. 

பாகிஸ்தான்,வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் இருந்து மத அடிப்படையிலான துன்புறுத்தல்களால் வெளியேறி,இந்தியாவில் தஞ்சமைடைந்த முஸ்லிம்கள் அல்லாத பிற சிறுபான்மையினருக்கு குடியுரிமை வழங்கும் வகையில் மத்தியில் உள்ள பாஜக அரசு குடியுரிமை திருத்த மசோதாவை கொண்டுவந்தது.சட்டமும் அமலுக்கு வந்த நிலையில்  இதற்கு எதிராக நாடு முழுவதும் தொடர்ச்சியாக பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இன்றும் டெல்லி,லக்னோ,கர்நாடகா உள்ளிட்ட இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்  உத்திர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ஹாசன்கஞ்ச் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்தில் வாகனங்கள் மீது தீ வைக்கப்பட்டது.இதனால் போலீசார் அங்கிருந்த போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இதனால் அந்த இடங்கள் போராட்டக்களம் போல காட்சியளித்தது.