FIFA WorldCup2022: ஃபிஃபா உலகக்கோப்பையில், எந்தெந்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி?

ஃபிஃபா உலகக்கோப்பையில் நாக் அவுட் சுற்றுக்கு பிரான்ஸ், பிரேசில் மற்றும் போர்ச்சுகல் உட்பட 7 அணிகள் முன்னேறியுள்ளன.

கத்தாரில் நடந்து வரும் ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை தொடரில் தற்போது குரூப் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 8 பிரிவுகளாக ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 32 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

குரூப் சுற்று போட்டிகளின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 16 அணிகள் பங்குபெறும் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இதுவரை 7 அணிகள் அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. 5 அணிகள் தொடரை விட்டு வெளியேறியுள்ளன.

நேற்று நடைபெற்ற ஆட்டங்களில் பெற்ற வெற்றியின் மூலம் குரூப்-ஏ விலிருந்து நெதர்லாந்து(7) மற்றும் செனகல்(6) புள்ளிகளுடனும், குரூப்-பி விலிருந்து இங்கிலாந்து(7) மற்றும் அமெரிக்கா(5) புள்ளிகளுடனும் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.

பிரான்ஸ், பிரேசில், போர்ச்சுகல், நெதர்லாந்து, செனகல், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா அணிகள் இதுவரை நாக் அவுட் சுற்றுக்கும், கத்தார், கனடா, ஈக்குவடோர், ஈரான் மற்றும் வேல்ஸ் அணிகள் தொடரிலிருந்து வெளியேறியுள்ளன.

16 அணிகள் பங்கேற்கும் அடுத்த சுற்றான நாக் அவுட் சுற்றுக்கு 7 அணிகள் தகுதி பெற்றுள்ள நிலையில், மீதம் உள்ள 9 அணிகளுக்கு இன்னும் 20 அணிகள் போட்டியிடுகின்றன.

author avatar
Muthu Kumar

Leave a Comment