#BREAKING: பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக டு பிளெசிஸ் நியமனம்…!

நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடர் வரும் மார்ச் 26 ஆம் தேதி தொடங்குகிறது.  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ் நியமிக்கப்பட்டுள்ளார் என்றுஅறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு முக்கிய வீரராக இருந்த டு பிளெசிஸ், கடந்த மாதம் நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் 7 கோடி ரூபாய்க்கு ஆர்சிபியால் வாங்கப்பட்டார்.

கடந்த சீசனின் இறுதியில் ஆர்சிபி கேப்டன் பதவியில் இருந்து விலகிய விராட் கோலி விலகினார். இதனால், ஆர்சிபி அணியின் கேப்டனாக டு பிளெசிஸ், ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் மற்றும் இந்தியா வீரர் தினேஷ் கார்த்திக் ஆகிய மூன்று பேரில் ஒருவர் தான் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பெங்களூர் அணியின் கேப்டனாக டு பிளெசிஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.  தினேஷ் கார்த்திக், மேக்ஸ்வெல் இருவரும் அணியை வழிநடத்த போதுமான அனுபவம் வாய்ந்தவர்கள் என்றாலும், தென்னாப்பிரிக்காவை வழிநடத்திய டு பிளெசிஸின் அனுபவம்தான் டு பிளெசிஸை கேப்டனாக நியமிக்க உதவியது.

டு பிளெசிஸ் 115 சர்வதேச போட்டிகளில் தென்னாப்பிரிக்காவை வழிநடத்தினார். அதில்  81 முறை வெற்றி பெற்றது. டு பிளெசிஸ் தலைமையில் 40 டி20 போட்டிகளில் 25-ல் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது. பிப்ரவரி 2020 -ல் டு பிளெசிஸ் அனைத்து வடிவங்களிலும் தென்னாப்பிரிக்காவின் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். ஐபிஎல் 2021 இல் டு பிளெஸ்ஸிஸ் 633 ரன்கள் குவித்தார். ஆரஞ்சு தொப்பி வென்ற ருதுராஜ் கெய்க்வாட்டை விட டு பிளெசிஸ் இரண்டு ரன் தான் குறைவாக இருந்தார்.

ஐபிஎல் 2020 மற்றும் 2021ல் சேர்த்து 1000 ரன்களுக்கு மேல் அடித்த டு ப்ளெசிஸ் கடந்த இரண்டு சீசன்களில் சிஎஸ்கே அணிக்காக முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார்.

author avatar
murugan