அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் – சி.டி‌.ரவி

நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழக மேலிட பொறுப்பாளர் சி.டி‌.ரவி பேட்டி.

பாஜக தேசிய பொதுச்செயலாளரும், தமிழக மேலிட பொறுப்பாளருமான சி.டி‌.ரவி இன்று திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடி தலைமையில் இந்தியா வலிமையுடன் முன்னேறி செல்கிறது. பாஜகவில் உள்ள ஒவ்வொருவரின் கடமையும், ஒவ்வொரு இந்திய குடிமகனின் வளர்ச்சி தான். திமுக, காங்கிரஸின் நோக்கம் அவர்களது குடும்பத்தை வளர்ப்பது தான் என கூறினார்.

5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் ஊழல் நடைபெற்றதற்கான ஆதாரம் இருந்தால் காட்டச் சொல்லுங்கள்.  திமுக, காங்கிரேசின் முழு நேர வேலை ஊழல் மட்டும் தான். நாளுக்கு நாள் பாஜக தமிழகத்தில் வளர்ந்து கொண்டிருக்கிறது. அண்ணாமலையை பார்த்து எல்லோரும் பயப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.

4 பேரை வைத்துக்கொண்டு பாஜக இயங்கிக் கொண்டிருக்கிறது என முன்னாள் பிரதமர் நேரு ஒரு முறை சொன்னார். ஆனால் தற்போது மொத்த நாடும் எங்களுக்கு பின் உள்ளது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக, பாஜக கூட்டணி ஏற்படுமா என்ற கேள்விக்கு, நாங்கள் கட்சியை வலுப்படுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்

Leave a Comment