மீண்டும் சிக்கலில் என்னை நோக்கி பாயும் தோட்டா?! சொன்ன தேதியில் வெளியாகுமா?

நடிகர் தனுஷ் மற்றும் இயக்குனர் கௌதம் வாசுதேவ மேனன் கூட்டணியில் காதல் படமாக உருவாகியுள்ள திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா. இப்படம் தயாராகி இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது இன்னும் படம் ரிலீசாகமல் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் செப்டம்பர் 6ம் தேதி படம் ரிலீசாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது. அதேபோல் மற்ற மொழிகளிலும் செப்டம்பர் 6ம் தேதி இப்படம் வெளியாகும் என போஸ்டர்கள் வெளியாகின.

இதற்கிடையில் இப்படத்தின் விநியோகிஸ்தர் ஏற்கனவே பாகுபலி, சிந்துபாத் ஆகிய படங்களினை ரிலீஸ் செய்ததில் கடன் பாக்கி உள்ளதாம். ஆதலால் என்னை நோக்கி பாயும் தோட்டா படத்தை அவர் ரிலீஸ் செய்யக்கூடாது என கடன் கொடுத்தவர்கள் தரப்பில் இருந்து புது சிக்கல் உருவாகியுள்ளதாம்.  இந்த சிக்கலை தற்போது தீர்ப்பதற்காக இப்பட விநியோகிஸ்தர் மும்பை சென்றுள்ளாராம்.

மேலும் செப்டம்பர் 6இல்வெளியாகும் மற்ற படங்களின் தயாரிப்பு தரப்பிடமும் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம்.  காரணம் இப்படத்தின் வசூல் அதிகமானால் மட்டுமே கடன் முழுதாக அடைக்க முடியுமாம். அதனால் மற்ற பட தயாரிப்பாளர்களிடமும்  பேச உள்ளாராம். என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.