16 ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து அணி!

16 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு போட்டிகள் கொண்ட சர்வதேச டி 20 தொடருக்காக அடுத்த ஆண்டு அக்டோபரில் பாகிஸ்தானுக்கு இங்கிலாந்து அணி வருவதாக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் நேற்று தெரிவித்துள்ளது.

கராச்சியில் அடுத்த ஆண்டு அக்டோபர் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இந்த இரண்டு போட்டிகளும் நடைபெறும். இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி) ஆகிய இரண்டும் இந்த  சுற்றுப்பயணத்தை உறுதிப்படுத்தின.

இது இந்தியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பைக்கு முன்னதாகவேஇந்த போட்டி நடைபெறும் என்று கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில் இங்கிலாந்து அணியை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைத்தது. ஆனால் சிறந்த வீரர்கள் கிடைக்காததால் மற்றும் செலவுகள் தொடர்பான விஷயங்களால் இங்கிலாந்து அணி சுற்றுப்பயண நேரத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

அடுத்த ஆண்டு அக்டோபர் 12 ஆம் தேதி இங்கிலாந்து அணி கராச்சிக்கு வரும்,  பின்னர், இரு அணிகளும் அக்டோபர் 16 ஆம் தேதி ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்காக  இந்தியாவுக்கு புறப்படும்.

கடைசியாக இங்கிலாந்து அணி 2005 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயண செய்தது, அப்போது,  மூன்று டெஸ்ட் மற்றும் ஐந்து ஒருநாள் போட்டிகளில் விளையாடியது.  கடந்த பல ஆண்டுகளாகவே எந்த சர்வதேச அணியும் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செல்லவில்லை. பாகிஸ்தானுக்கு ஐக்கிய அரபு அமீரகம் தான் ஹோம் கிரவுண்டாக இருந்துவருகிறது.

தற்போது சர்வதேச அணிகள் பாகிஸ்தானுக்கு செல்ல தொடங்கியுள்ளன. இலங்கை அணியை தொடர்ந்து பாகிஸ்தானுக்கு  இங்கிலாந்து அணி சுற்றுப்பயணம் செல்கிறது.

author avatar
murugan

Leave a Comment