‘ஆப்டிமஸ்-ஜென் 2’ ரோபோவை வெளியிட்டார் எலான் மஸ்க்!

உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க், பல துறையில் தொடர்ந்து பல்வேறு புதுமைகளை படைத்து வருகிறார். அதன்படி, டெஸ்லா எலக்ட்ரிக் கார், விண்வெளி பயணம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அசத்தி வரும் எலான் மஸ்க், சமீபத்தில் நியூராலிங்க் நிறுவனம் உருவாக்கிய சிப்-ஐ மனித மூளையில் பொருத்துவது தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த சமயத்தில், சில மாதங்களுக்கு முன்பு டெஸ்லா நிறுவன நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய எலான் மஸ்க், மனித உருவ ரோபோக்களை தயாரிக்கப்போவதாக அறிவித்திருந்தார். எலான் மஸ்க் இதற்காக உருவாக்கிய குழு, வேகமாக பணியாற்றி ஒரு ரோபோ கட்டமைப்பை உருவாக்கியது. இதை தொடர்ந்து, Optimus என பெயர் கொண்ட டெஸ்லா ரோபோ, செய்யும் வேலைகளையும், அசைவுகளின் வீடியோ தொகுப்பையும் எலான் மஸ்க் வெளியிட்டிருந்தார்.

இந்த வீடியோ மூலம் இதுவரை வெளியான ரோபோக்களில் Optimus டெஸ்லா ரோபோ மனித வடிவில் இருப்பது மட்டும் அல்லாமல் ஸ்டிபெரிலிட்டில் சிறப்பானது என கூறப்பட்டது. டெஸ்லா ரோபோ குழு, இந்த ரோபோவை மேம்படுத்தும் பணிகளை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், டெஸ்லா தனது புதுப்பிக்கப்பட்ட ‘ஆப்டிமஸ்-ஜென் 2’ என்ற அடுத்த தலைமுறை மனித உருவ ரோபோவை வெளியிட்டுள்ளது.

இனி வாட்ஸ்அப்பில் மெசேஜை Pin செய்யலாம்.! எப்படி தெரியுமா.?

அதாவது, எலோன் மஸ்க் தலைமையிலான டெஸ்லா ரோபோ டீம், மனிதர்களிடமிருந்து திரும்பத் திரும்பச் செய்யும் பணிகளை பெறுவதை நோக்கமாகக் கொண்ட, அதன் அடுத்த தலைமுறை மனித உருவ ரோபோவான ‘ஆப்டிமஸ்-ஜென் 2’  ரோபோவை வெளியிட்டுள்ளது. ரோபோவின் இந்த வெர்சன் என்பது டெஸ்லா வடிவமைத்த அனைத்து ஆக்சுவேட்டர்கள் மற்றும் சென்சார்களைக் கொண்டுள்ளது, முந்தையதை விட 10 கிலோ எடை குறைவாக உள்ளது.

இந்த மேம்படுத்தப்பட்ட புதிய ரோபோ 30% வேகமாக நடக்கக்கூடியது மற்றும் சிறந்த சமநிலையைக் கொண்டுள்ளது. மேலும், ‘ஆப்டிமஸ்-ஜென் 2’  ரோபோ தொட்டுணரக்கூடிய உணர்வைக் கொண்டுள்ளது. இது டெஸ்லாவின் உற்பத்தி நடவடிக்கைகளில் மீண்டும் மீண்டும் பணிகளை மேற்கொள்வதற்கு ஏற்றதாக அமைகிறது.

இதுதொடர்பான வீடியோவை  எலோன் மஸ்க்  தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.  அவர் கூறியதாவது, ஆப்டிமஸ் ஜெனரல் 2 ரோபோ ஒரு நேர்த்தியான தோற்றம் மற்றும் மேம்பட்ட செயல்திறனைக் கொண்டுள்ளது. இது மனிதனைப் போன்ற நடன அசைவுகளையும் பிரதிபலிக்கும் என்றும் ஆப்டிமஸின் தேவை 10 முதல் 20 பில்லியன் யூனிட்களை எட்டக்கூடும் எனவும் டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார்.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்