#ELECTIONBREAKING: நீண்ட இழுபறிக்கு பிறகு திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தொகுதி பங்கீட்டு விவகாரத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளதாக கூறப்பட்டது.

இதையடுத்து, திமுக – மார்க்சிஸ்ட் கம்ம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு இடையே இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஒருவாரத்திற்கு மேலாக திமுக -மார்க்சிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்து வந்த நிலையில், இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இரட்டை இலக்கில் தொகுதிகள் கேட்கப்பட்ட நிலையில், 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது திமுக என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்